உலகளவில் புதிய சரித்திரம் படைத்தது இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போது சமூக வலைத்தளங்களின் பாவனையானது வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இதனால் அனைத்து வகையான சமூக வலைத்தளங்களும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டு முன்னணியில் திகழ்ந்து வருகின்றன.

இந்த வரிசையில் இன்ஸ்டாகிராமும் இணைந்துள்ளது.

அதாவது உலகெங்கிலும் தற்போது சுமார் ஒரு பில்லியன் வரையான பயனர்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் வரை 800 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் தற்போது மேலதிகமாக 200 மில்லியன் பயனர்களை பெற்று 1 பில்லியனை எட்டியுள்ளது.

இந்த தகவலை இன்ஸ்டாகிராமின் இணை உருவாக்குனர் கெவின் சிஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers