பயனர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை வெளியிட்டது இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
34Shares

புகைப்படங்களை பகிரும் தளமாக இனங்காணப்படும் இன்ஸ்டாகிராமினை இன்று உலகளவில் பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஒருவர் போஸ்ட் செய்யும் ஸ்டோரியினை மற்றொருவர் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும்போது அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வசதியினை அறிமுகம் செய்வதற்கான முயற்சியினை இன்ஸ்டாகிராம் மேற்கொண்டிருந்தது.

எனினும் இவ் வசதியானது பரீட்சிப்பு நிலையில் இருந்த போதிலும் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படாது என தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் பரீட்சிக்கப்பட்டு வந்த இவ் வசதியில் சில குறைபாடுகள் காணப்பட்டதை அடுத்தே இம் முடிவுக்கு இன்ஸ்டாகிராம் வந்துள்ளத.

அதாவது ஸ்கிரீன் ஷாட் செய்யும்போது சில பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டிருந்த போதிலும் சிலருக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை.

இதனாலேயே முழுமையாக வெற்றியளிக்காத நிலையில் குறித்த வசதி நீக்கப்படவுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்