இன்ஸ்டாகிராமில் வருகிறது புதிய கட்டுப்பாடு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சமூக வலைத்தளங்களினால் அதிக நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்ற அம்சங்களும் காணப்படவே செய்கின்றன.

பலருக்கிடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தக்கூடிய இப் பொதுவெளியில் அநாகரிகமான வார்த்தைப் பிரயோங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனைத் தவிர்ப்பதற்கு அனைத்து வகையான சமூக தளங்களும் முனைப்புக்காட்டி வருகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராமும் இணைந்துள்ளது.

இதன்படி மற்றவர்களை அவமதிக்கக்கூடிய அல்லது பங்கம் விளைவிக்கக்கூடிய கமெண்ட்களை பில்டர் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அநாவசியமான கமெண்ட்கள் நீக்கப்படும்.

எனினும் இவ் வசதி தற்போது ஆங்கில மொழிக்கு மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers