இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புதிய வசதி: ஆட்டம் காணுமா பேஸ்புக்?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர முடிவதுடன் குரல் வழி அழைப்பு, வீடியோ அழைப்பு உட்பட சட் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

ஆனால் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிரும் வசதிகளே இதுவரை தரப்பட்டிருந்தன.

எனினும் இன்று முதல் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினையும் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் ஆனது முன்னணி தளங்களுள் ஒன்றாக திகழ்கின்ற நிலையில் இப் புதிய வசதி ஊடாக மேலும் பல மில்லியன் பயனர்களை இன்ஸ்டாகிராம் தன்னகப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதனால் பேஸ்புக் மீதான நாட்டம் குறையக்கூடிய நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்