மொபைல் சாதன ஒலிவாங்கியை தானாக இயக்குகின்றதா பேஸ்புக் அப்பிளிக்கேஷன்?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் மீது பல குற்றச்சாட்டுக்கள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பேஸ்புக் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தும்போது குறித்த அப்பிளிக்கேஷன் மொபைல் சாதனங்களில் உள்ள ஒலிவாங்கியை (Mic) தானாக இயக்கி பயனர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக செய்தி ஒன்று பரவியது.

எனும் எந்தவொரு பேஸ்புக் அப்பிளிக்கேஷனும் இவ்வாறு ஒட்டுக்கேட்பதில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மிகப் பிரம்மாண்டமான தகவல் திருட்டு தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஷுக்கர் பேர்க் நீதிமன்றில் ஆஜராக தனது வாக்குமூலத்தினை அளித்திருந்தார்.

இதன்போதே மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers