பயனர்களின் பாதுகாப்பு கருதி புதிய வசதியை தரும் இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
9Shares
9Shares
ibctamil.com

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்து விவகாரம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் பல பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏனைய சமூக வலைத்தளங்கள் மீதும் இதே கண்ணோட்டம் வைக்கப்படுகின்றது.

இதனால் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இதன்படி பயனர்கள் தாம் தரவேற்றம் செய்த தகவல்கள் அனைத்தையும் விரும்பிய நேரத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியினை வழங்கவுள்ளது.

இவ் வசதியின் ஊடாக புகைப்படங்கள், வீடியோக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனமும் இதே வசதியினை அறிமுகம் செய்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமும் அதே வசதியினை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்