பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த பேஸ்புக்கின் புதிய நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
78Shares
78Shares
ibctamil.com

மில்லியன் கணக்கான பேஸ்புக் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டு தனிநபர் தகவல்கள் திருடப்பட்டதை அடுத்து பேஸ்புக்கினை பயன்படுத்துவதற்கு பயனர்கள் அஞ்சிவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அவர்களின் நன்மதிப்பை பெறவேண்டிய கட்டாயத்திற்கு பேஸ்புக் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

இதற்காக புதிய நடவடிக்கை ஒன்றினை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி கையாளப்படும்போது அது தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று அனுப்பப்படவுள்ளது.

இச் செய்தி கிடைக்கப்பெற்றதும் பயனர்கள் தமது கணக்கு தொடர்பான பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வமான வெளியிட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்