இன்ஸ்டாகிராம் பாவனை தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
43Shares
43Shares
lankasrimarket.com

புகைப்படங்களையும் சிறிய அளவிலான வீடியோக்களையும் பகிரும் தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.

குறுகிய காலத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த இத் தளம் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவில் உள்ள வயது வந்தவர்களில் 35 சதவீதமானவர்கள் இன்ஸ்டாகிராமினை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2016ம் ஆண்டினை விடவும் 6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இது தவிர ஸ்னாப் சாட், டுவிட்டர் என்பனவும் வயது வந்தவர்களால் பயன்படுத்தப்படும் பிரபல தளங்களாக இருக்கின்றது.

விசேடமாக 18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் அதிகமாக இவற்றினை பயன்படுத்துகின்றனர்.

மேலும் யூடியூப் தளத்தினை 73 சதவீமான வயது வந்தவர்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் இவர்களுள் 93 சதவீதமானவர்கள் 18 தொடக்கம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவ் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்