வாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில்லை

Report Print Gokulan Gokulan in ஆப்ஸ்

நெட்டே உபயோகிக்காமல் தகவல் பரிமாறிகொள்ளும் வகையில் டோட்டல் எனும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஹைக் மெசெஞ்சர் நிறுவனம்.

இந்த டோட்டல் ஆப் பயன்படுத்தி இனையதள வசதியே இல்லாமல் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கவும், கட்டணங்கள் செலுத்தவும், மெசெஜ்கள் பரிமாறிகொள்ளவும் முடியும் என்பது இதன் தனி சிறப்பு.

இதனிடையே, ஹைக் மெசேஞ்சர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான கவின் மிட்டல் வெளியிட்ட அறிக்கையில், இந்திய மார்க்கெட்டை ஆய்வு செய்தால், 400 மில்லியன் ஸ்மார்ட் போன் பயனாளிகளில், 200 மில்லியன்பேர்தான் தினசரி ஆன்லைனுக்கு வருகிறார்கள், எனவே இனையதளம் பயன்படுத்தாதவர்களையும் கவரும் விதமாக இந்த ஆப் அறிமுகப்பட்டுள்ளது.

ரூ.2000ம் விலைக்குள் அறிமுகமாகும், இன்டெக்ஸ் மற்றும் கார்பன் செல்போன்களுடன் டோட்டல் ஒப்பந்தம் செய்துள்ளது. மார்ச் மாதம் முதல் இந்த வகை போன்களில் டோட்டல் ஆப்பும் இணைந்தே வரும்.

செல்போன் எண்ணை வைத்து இன்னும் பல சேவைகளையும் இதில் பெற முடியும், ரயில்வே டிக்கெட் அப்டேட்டுகளையும் இதில் பார்க்க முடியும், டோட்டல் ஆப், 1 எம்பிக்கும் குறைவான லைட்வெய்ட் டாகும் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்