விரைவில் வெளிவர உள்ள வாட்ஸ்அப் வணிக செயலி

Report Print Kabilan in ஆப்ஸ்
64Shares

பேஸ்புக் நிறுவனம் வியாபாரம் செய்வோருக்கு என வாட்ஸ் அப் வணிக செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

உலக அளவில் மக்களால் உரையாடல்கள், புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை பகிருவதற்காக வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க ஏதுவாக, வாட்ஸ் அப் வணிக செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்சமயம் வாட்ஸ் அப் அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவல்களில், வாட்ஸ் அப் பிஸ்னஸ் கணக்குகள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, வாட்ஸ் அப் வணிக கணக்குகள் உறுதியானதா என்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வாட்ஸ் அப் வணிக கணக்குகளுடன் Chat செய்யும் போது, குறிப்பிட்ட Contact profile வகை எவ்வாறானது என்பதையும் பார்க்க முடியும்.

’Benchmark badge' உறுதி செய்யப்பட்டு வாட்ஸ் அப் கணக்கில், பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமான வாட்ஸ் அப் செயலியை விட, ‘வாட்ஸ் வணிக செயலி’ முற்றிலும் வித்தியாசமானது ஆகும். இந்த செயலியின் சின்னம் மாற்றப்பட்டு, ‘B' என்னும் எழுத்து பச்சை நிறத்தில் உள்ளது போல இடம்பெற்றுள்ளது.

எனினும், இதனை தரவிறக்கம் செய்வதில் எந்தவித மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியில் வியாபாரத்திற்கான கணக்குகளை உருவாக்குவது, பதில் அளிப்பது, Analytics போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ‘வாட்ஸ் அப் வணிக செயலி’ தனியார் தேர்வர்கள் மூலமாக சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் இது செயலியாக வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்