டுவிட்டரின் அதிரடிச் சலுகை தற்போது அனைத்து பயனர்களுக்கும்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
34Shares

பேஸ்புக் வலைத்தளத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு பயனர்களைக் கொண்ட சமூக வலைளத்தளமாக டுவிட்டர் காணப்படுகின்றது.

இதில் பல்வேறுபட்ட வசதிகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் தட்டச்சு செய்து பகிரக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை 140 வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இதனை அதிகரிப்பது தொடர்பாக அண்மையில் பரீட்சார்த்த முயற்சியில் டுவிட்டர் ஈடுபட்டிருந்தது.

இதன்படி 140 எழுத்துக்களை இரட்டிப்பு செய்து 280 எழுத்துக்களாக வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பரீட்சார்த்த முயற்சியின் போது இவ் வசதி சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இவ் வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் ஜப்பான், சீனா மற்றும் கொரிய நாட்டு பயனர்கள் தொடர்ந்தும் 140 எழுத்துக்கள் வரையே பயன்படுத்துவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம் அவர்களின் மொழியில் குறைந்த எழுத்துக்களைக் கொண்டு அதிக விபரிப்புக்களை மேற்கொள்ள முடிவதாகும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்