உங்கள் முக்கிய பணிகள் தள்ளி போகாம இருக்கனுமா? அப்ப இந்த ஆப்ஸ்களை பயன்படுத்துங்க

Report Print Raju Raju in ஆப்ஸ்

உலகம் பயணிக்கும் வேகத்தில் நம்முடைய முக்கிய பணிகள் சிலவற்றை தள்ளி போடும் நிலை பலருக்கும் ஏற்படும்.

சில முக்கிய விடயங்களை செய்ய பலர் மறப்பதும் கூட நடக்கும். இந்த கவனச்சிதறல்களை தவிர்க்க ஆப்ஸ்கள் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?

செல்ப் கண்ட்ரோல் (Selfcontrol)

நம் கவனத்தை திசைதிருப்பக்கூடிய இணையதளங்களை தடுக்க இந்த ஆப்ஸ் பயன்படுகிறது.

இதை நீக்க முயற்சித்தாலோ, கணினி, போன்களை ரீஸ்டார்ட் செய்ய முயற்சித்தால் கூட இந்த ஆப்ஸ் தனது பணியை முடித்தவுடன் தான் அவற்றை அனுமதிக்கும் என்பது முக்கிய விடயமாகும்.

ஆப்டெட்டாக்ஸ் (Appdetox)

நம்மில் பலர் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு ஆப்ஸ்களை பயன்படுத்துவோம். இதை தடுக்கவே இந்த ஆப்ஸ் பயன்படுகிறது.

அதாவது, ஒரு ஆப்ஸை அதிக நேரம் பயன்படுத்தும்போது, இடைவேளை எடுத்து கொள்ளுமாறு இந்த ஆப் நமக்கு ஞாபகப்படுத்தும்.

புரோகிராஸ்டர் (Procraster)

பெரியளவிலான பணிகள் நமக்கு இருந்தால் அதை தள்ளி போடும் வகையில் நம் மனம் சோர்வடையும். அந்த சமயத்தில் இந்த ஆப் நம் அதிகப்படியான வேலையை ஒழுங்குபடுத்தி பகுதி, பகுதியாக செய்து முடிக்க திட்டமிட உதவுகிறது.

ஸ்குவாக் (Squawk)

சில ஆப்ஸ்கள் நமது ஸ்மார்ட் போனில் தேவையில்லாமல் இருக்கும். நாம் அதை அதிகம் உபயோகபடுத்த மாட்டோம்.

இப்படியான, அதிகம் பயன்படுத்தபடாத ஆப்ஸ்களை ஸ்குவாக் ஆப் கண்டுபிடித்து பின்னர் அதை நீக்கி, நமது போனின் மெமரியை மிச்சப்படுத்த உதவுகிறது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments