ஸ்கைப் மொழிபெயர்ப்பில் மற்றுமொரு புதிய மொழி இணைப்பு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கைப் சேவையினை அறிந்திராதவர்கள் இருக்கவே முடியாது.

அந்த அளவிற்கு உலகப் பிரபல்யம் பெற்ற ஓர் வலையமைப்பு சேவையாகும்.

இதன் ஊடாக இலவசமாகவும், சந்தா செலுத்தியும் வீடியோ அழைப்புக்கள், குரல்வழி அழைப்புக்கள், குறுஞ்செய்தி பரிமாற்றங்கள், கோப்பு பரிமாற்றங்கள் என்பவற்றினை மேற்கொள்ள முடியும்.

இச் சேவையில் புதிய அம்சமாக மொழி மாற்றியும் சில வருடங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்டிருந்தது.

இதன் ஊடாக மொழி தெரியாத இருவர்கள் ஒருவருடன் ஒருவர் இலகுவாக தொடர்புகொள்ள முடியும்.

எனினும் குறிப்பிட்ட அளவு மொழிகளே இவ் வசதியில் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது இச் சேவையில் 10வது மொழியாக ஜப்பான் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதைவிட English, Spanish, French, German, Chinese (Mandarin), Italian, Portuguese (Brazilian), Arabic, Russian ஆகிய மொழிகள் ஏற்கணவே உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments