அமேஷானில் ஷொப்பிங் செய்ய இனி கிரடிட் கார்ட் அவசியமில்லை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இன்று ஒன்லைனில் ஷொப்பிங் செய்வது என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.

இதற்காக கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் போன்ற வங்கி அட்டைகளை அனேகமானவர்கள் பயன்படுத்துவார்கள்.

இவ்வாறு பயன்படுத்துவதனால் சில பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

எனவே இதற்கான மாற்று வழி ஒன்றினை அமேஷான் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதாவது Amazon Cash சேவையினை அறிமுகம் செய்கின்றது.

இதன் ஊடாக அமேஷானின் எந்தவொரு ஸ்டோரிலிருந்தும் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

இதற்காக விசேட மொபைல் அப்பிளிக்கேஷன் ஒன்றும் அறிமுகம் செய்யப்படுகின்றது.

15 டொலர்கள் தொடக்கம் 500 டொலர்கள் வரையிலான பெறுமதியில் இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

இவ்வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே நடைமுறக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதேவேளை இவ்வாறான வசதியினை ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களும் வழக்கிவருகின்றமை தெரிந்ததே.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments