உங்கள் தகவல்களை பாதுகாக்கணுமா? உடனடியாக இதை செய்திடுங்கள்

Report Print Meenakshi in ஆப்ஸ்

அதிகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால், நமக்கு நன்மை ஏற்பட்டாலும் அதே அளவிற்கு தீமையும் உண்டாகிறது. தற்போது தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திருடுவது மிக எளிதானதாக மாறிவிட்டது.

ஹேக்கர்கள் வங்கிகணக்குகளின் தகவல்கள் மட்டுமல்லாது, போட்டொ வீடியோக்களை திருடிவிடுகின்றனர். இந்த போட்டோகளானது தவறாக பயன்படுத்தப்படுகிறது.

நமது ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் தகவல்களை பாதுக்காப்பாக வைத்து கொள்வதற்கு ஆப்ஸ்கள் உதவுகின்றன.

KYMS

நமது ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்களை பாதுகாப்பாக பதிந்து வைப்பதற்கு உதவும் ஆப். இதனை நாம் தரவிறக்கம் செய்தவுடன் இதில் நான்கு இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்யவேண்டும்.

பின்னர், அதில் நாம் போட்டோ, வீடியோ, பைல் போன்ற அனைத்தினையும் பதிவேற்றி சேமித்து கொள்ளலாம். Wi-Fi மூலமாக இதனை நாம் பயன்படுத்தலாம். கையாள்வதற்கு எளிதாக இருக்கும் இந்த ஆப்பினை iOS இயங்குதளத்தில் பயன்படுத்த இயலும்.

Private Photo Vault

நமது புகைப்படங்களை யாரும் பார்க்காவண்ணம் இதில் மறைத்து வைத்து கொள்ளலாம். புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பாஸ்வேர்ட் அமைப்பதன் மூலம் மற்றவர்கள் பார்க்க இயலாது.

மேலும், வேறு யாராவது நம் புகைப்படங்களை பார்க்க முயற்சிக்கும் போது அவர்களை புகைப்படம் எடுத்து விடும் இதன் மூலம் புகைப்படங்களை பார்க்க முயற்சித்தவர் யார் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

Best Secret Folder

நாம் இந்த ஆப்-னை பயன்படுத்துவதனை எளிதாக யாரும் அறிய இயலாது. இந்த ஆப்-னை தரவிறக்கம் செய்தவுடன் இது “My Utilities” எனும் கோப்பாக பார்வைக்கு காண்பிக்கப்படும். இதனால் மற்றவர்களுக்கு ஆப் போன்று தெரியாது.

பாஸ்வேர்ட்டினை பதிவு செய்தப்பின், அதற்கு என தனியாக ஒரு கேள்வியும் பதிலும் அளிக்கப்படும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பாஸ்வேர்ட் தெரிந்தாலும் புகைப்படம், பைல்களை திருட இயலாது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments