வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஐபோன்கள் மற்றும் ஐபேட்களின் உதவியுடன் வீடியோக்களை எடிட் செய்வதற்கான அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Clips எனப்படும் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக விரைவாகவும், இலகுவாகவும் வீடியோக்களை எடிட் செய்ய முடியும்.

அத்துடன் குறுஞ்செய்தி உட்பட பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

புகைப்படங்களையும் வீடியோவாக மாற்றக்கூடியதாக இருப்பதுடன் பல்வேறுவகையான பில்டர்கள் மற்றும் எபெக்ட்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இந்த ஆப்பிளிக்கேஷனை ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments