பிரித்தானியா வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தத்தில் உடன்படிக்கையில் இணையக்கூடும்!

Report Print Thayalan Thayalan in உலகம்
பிரித்தானியா வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தத்தில் உடன்படிக்கையில் இணையக்கூடும்!
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவானது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான வர்த்தக ஒப்பந்தமான வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தத்தில் (NAFTA) சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன், பிரெக்சிற்றுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடையும் பட்சத்திலேயே இந்நிலை ஏற்படும் என அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரித்தானியா வெளியேறும்போது வர்த்தக உடன்படிக்கையேதும் எட்டப்படாத பட்சத்தில் NAFTA வில் இணைவது குறித்து பிரித்தானிய அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பிரித்தானியா, பிரெக்சிற்கு தயாராக உள்ள நிலையில், தமது வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளின் நிச்சயத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்த நிலைமாற்றுதல்களை ஏற்படுத்த விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்