பெண்களே உஷார்...மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு ஆபத்தாம்!

Report Print Kavitha in பெண்கள்
261Shares
261Shares
lankasrimarket.com

மாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

இரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு.

இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) என சொல்லப்படுகின்றது

அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள்.

அதிக இரத்தப்போக்கினால் ஏற்படும் பாதிப்புகள்

  • மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.
  • கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.
  • கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.
  • தைராய்டு பிரச்சனைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்