அந்த 2 ஹார்மோன்கள்: பெண்களின் உடலில் உண்டாக்கும் மாற்றங்கள்

Report Print Printha in பெண்கள்
176Shares
176Shares
lankasrimarket.com

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற இரு ஹார்மோன்கள் பெண்களுக்கு உடலில் சுரக்கக் கூடியது. இந்த இரண்டு ஹார்மோன்களும் பெண்கள் பருவம் அடைவது முதல் கருத்தரிப்பது வரை பல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது.

ஹார்மோன்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்

கருத்தரித்த பின் தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களில் பல மாற்றங்களை உண்டாக்குகின்றது.

இந்த ஹார்மோன் மாற்றங்களினால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. அதன் பின் குழந்தை பிறந்த உடன் தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்களே.

பெண்கள் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது, இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். அதனால் சினைப்பைகள் முட்டையை வெளிவிடாது.

அதனால் பெண்ளின் உடலில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து, மாதவிலக்கு முற்றிலுமாக நின்று விடும். இந்நிலையை தான் மொனோபாஸ் என்று கூறப்படுகிறது.

இவற்றையெல்லாம் தொடர்ந்து பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அதன் அளவுக்கு ஏற்ப காம உணர்வு, உடல் எடை, உடல்சூடு, பசி உணர்வு மற்றும் எலும்புகளின் சக்தி ஆகியவற்றில் பல மாற்றங்கள் உண்டாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்