வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்! வடக்கில் இடியுடன் கூடிய மழை

Report Print Murali Murali in காலநிலை
0Shares
0Shares
lankasrimarket.com

நாட்டில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையானது நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா, கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அம்பாந்தோட்டை மற்றும் மாதுறு ஓயா பகுதிகளில் மணிக்கு சுமார் 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும்.

இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை நாட்டின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்