தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் கனமழை: மத்திய அரசு எச்சரிக்கை

Report Print Fathima Fathima in காலநிலை
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட 12 மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பொழியும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த மூன்று நாட்களுக்கு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பீகார், கோவா, கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா, டாமன் மற்றும் டயூ ஆகிய மாநிலங்களில் கனமழை பொழியும்.

இதன் காரணமாக 14 முக்கிய நதிகளில் நீரின் அளவு அதிகரிக்கும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆறுகளில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்