காலநிலையில் திடீர் மாற்றம்! நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யும்

Report Print Vethu Vethu in காலநிலை
0Shares
0Shares
Cineulagam.com

இலங்கையில் நிலவி வந்த மாறுபட்ட காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணத்தின் சில இடங்களிலும் இந்த நிலைமை ஏற்பட கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தின் சில இடங்களில் காலை நேரத்தில் பனியுடனான காலநிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடி மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு மாத வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் ஹட்டன் நகரில் அடை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஹட்டன் நகரில் தேங்கியிருந்த நீர் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை சில தினங்களாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நிலவிய கடும் குளிரான காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்