முதலைகளுக்கு மேலே கயிற்றில் சிக்கிக் கொண்ட தந்தையும் மகனும்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா
107Shares
107Shares
lankasrimarket.com
அமெரிக்காவின் Orlandoவில் zipline எனப்படும் கயிற்றில் தொங்கியவாறே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் விளையாட்டின்போது சரியாக முதலைகள் இருக்கும் நீர்நிலைக்கு மேல் சிக்கிக் கொண்ட ஒரு தந்தையையும் மகனையும் மீட்புக் குழுவினர் மீட்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Gatorland என்னும் சாகச விளையாடுமிடத்தில் அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் இருவரும் முதலைகள் நிறைந்த நீர்நிலைக்கு மேல் 40 அடி உயரத்தில் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்கள் இருவரையும் மீட்டனர்.

இதற்கிடையில் Gatorlandஇன் மேலாளர், இது ஆபத்தே இல்லை, இதுபோல் நடப்பது சகஜம்தான் என்றும் இதுபோன்ற நேரங்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்