18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே லாட்டரி எண்ணில் அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா
399Shares
399Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கியே அதே எண் கொண்ட லாட்டரி சீட்டிற்கு 31 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Idaho நகரத்தின் Boise பகுதியைச் சேர்ந்தவர் Tran. சமீபத்தில் லாட்டரி சீட் வாங்கிய இவருக்கு 2 மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பு 31,86,90,000 ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 12-ஆம் திகதி இரவு என்னுடைய லாட்டரி சீட்டிற்கான எண்ணை ஸ்கேன் செய்து பார்த்தேன்.

என்னுடைய எண்ணான 06, 10, 15, 25, 36-ஐ சரிபார்த்த போது, எனக்கே பரிசு விழுந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது என்று கூறியுள்ளார்.

Tran கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் மூலம் 300 டொலர் பரிசாக கிடைத்துள்ளது.

இதையடுத்து தற்போது வாங்கிய லாட்டரி எண்ணையும், அந்த லாட்டரி எண்ணை சரிபார்த்த போது இரண்டும் ஒரே எண் தான் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர், கிடைத்த பரிசுத் தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்