சிரியாவில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் இவைதான்! பென்டகன் விளக்கம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
396Shares
396Shares
lankasrimarket.com

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இணைந்து சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படும் மற்றும் சேமித்து வைக்கப்படும் இடங்கள் மீது வான் வழித்தாக்குதல் நடத்தின.

சிரிய நகரமான டூமாவின்மீது ரசாயனத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கருதப்பட்டதன் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரிய தலைநகரமான டமாஸ்கஸ் மற்றும் ஹாம்ஸ் நகரின் அருகிலுள்ள இரண்டு இடங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் கூறும்போது தனது நட்பு நாட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கப்படாமல் விடப்படாது என்று தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் ஒரு கூட்டு நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் உரையைத் தொடர்ந்து மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் விளக்கமளித்தது.

  • டமாஸ்கஸில் உள்ள ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வகம்
  • ஹாம்ஸுக்கு மேற்கிலுள்ள ஆயுதக் கிடங்கு
  • ஹாம்ஸுக்கு அருகிலுள்ள ரசாயன ஆயுதங்கள் கிடங்கு மற்றும் கட்டுப்பாட்டு அறை

இதற்கிடையில் சிரிய அரசுத் தொலைக்காட்சி பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சிரிய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும், டமாஸ்கஸிலுள்ள ஆய்வகம் மட்டும் சேதமடைந்ததாகவும் பொதுமக்களில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்