அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி, 50 பேர் படுகாயம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முகமூடியுடன் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் 19 வயதான முன்னாள் மாணவர் Nicolas de Jesus Cruz என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒழுக்கமின்மை காரணமாக குறித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இந்த கொடூர தாக்குதலை அவர் முன்னெடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் விசாரணைக்கு பின்னரே உறுதியான தகவல்கள் வெளிவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா மாகாணத்தின் Parkland பகுதியில் அமைந்துள்ள Majory Stoneman Douglas உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த நபர் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.

தற்போது குறித்த பாடசாலையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் துப்பாக்கி ஏந்திய நபர் அப்பகுதியில் இருந்து மாயமானதாகவும், பொலிசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே துப்பாக்கி சூடில் ஈடுபட்ட நபருடன் பாடசாலை மாணவன் ஒருவர் எதிர்த்து சண்டையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்