தாய்க்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்த 8 வயது மகள்

Report Print Raju Raju in அமெரிக்கா
190Shares
190Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்ட பெண் மீண்டும் கர்ப்பமான நிலையில் அவரின் குழந்தையை மூத்த மகள் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அரிஜோனா மாகாணத்தின் கில்பர்ட் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன், இவர் மனைவி கெல்சி (29) தம்பதிக்கு எட்டாண்டுகளுக்கு முன்னர் ப்ரூக் (8) என்ற மகள் பிறந்தார்.

அதன் பின்னர் மூன்று முறை கெல்சிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுட்டது, இதையடுத்து கடந்த 2016-ல் தனது இரண்டாவது குழந்தையை கெல்சி பெற்றெடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த கெல்சி சில தினங்களுக்கு முன்னர் மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் கெல்சிக்கு பிரசவம் நடந்த அறை உள்ளே இருந்த அவரின் மூத்த மகள் பரூக் பிரசவத்துக்கு உதவியதோடு குழந்தையின் தலையை பிடித்து கொண்ட நிலையில், உலகுக்கு தனது தங்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பரூக் பிரசவம் பார்க்க உதவியதற்கு பின்னால் பெரிய காரணம் உள்ளது. இதுகுறித்து கெல்சி கூறுகையில், கருச்சிதைவுக்கு முன்னர் நான் கர்ப்பமாக இருக்கும் போது என்னிடம் வந்த பரூக் நான் பெரிய சகோதரியாக ஆக போகிறேன், எனக்கு தங்கை பிறக்க போகிறது என மகிழ்ச்சியுடன் கூறுவார்.

இதோடு இதை வாசகமாக ஸ்லேட்டில் எழுதியும் வைத்திருந்தார், ஆனால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து தற்போது எனக்கு நடந்த பிரசவத்தில் ப்ரூக் பங்கும் இருக்க வேண்டும் என எண்ணி அவளை இதை செய்ய வைத்தேன்.

அவளின் முதிர்ச்சியும், தைரியமும் என்னை வியக்க வைக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்