உயிர் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்

Report Print Raju Raju in அமெரிக்கா
499Shares
499Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் உயிர் தோழியை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர் பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ப்ளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் உள்ள செண்ட் பீட்டர் கத்தோலிக பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்பவர் ஜோசிலின் மோர்பி.

ஓரின சேர்க்கையாளரான இவர் தனது உயிர் தோழி நடாஷாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம் ஜோசிலினை தற்போது பணிநீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து ஜோஸ்லின் கூறுகையில், என் காதலியை திருமணம் செய்து கொண்டதால் நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.

அவர்கள் பார்வையில் நான் செய்தது தவறாக உள்ளது, ஆனாலும் ஆசிரியை தொழிலை தான் வருங்காலத்திலும் செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

செண்ட் பீட்ட பள்ளி நிர்வாக செய்தி தொடர்பாளர் கூறுகையில், பணிக்கு சேரும் முன்னரே எல்லா ஆசிரியைகளிடமும் கத்தோலிக தேவாலய விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஜோசிலின் மீறியதால் அவரை வேறு வழியின்றி பணிநீக்கம் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

ஜோசிலின் திருமணத்தில் கலந்து கொண்ட சக ஆசிரியைகளுக்கு கடும் எச்சரிக்கையை பள்ளி நிர்வாகம் விடுத்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்