குற்றுயிராக கிடந்த இளம் பெண்ணை கற்பழித்த இளைஞன்: நிர்வாண புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கொடூரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் தமது தோழிக்கு போதை மருந்து அளித்து, அவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து அந்த இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை தமது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார் அந்த இளைஞர்.

வாஷிங்டன் மாகாணத்தின் Lakeview சாலை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Brian Varela(19) என்ற இளைஞர் தமது தோழி Alyssa Mae Noceda(18) உடன் சம்பவத்தன்று போதை மருந்து பயன்படுத்தியுள்ளார்.

இதில் அலிஸ்ஸா அதிக போதை காரணமாக சுயநினைவை இழந்து படுத்திருந்துள்ளார். அப்போது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இளைஞர் பிரியான்.

பின்னர் தமது நண்பர்கள் அனைவருக்கும் அவரது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து குற்றுயிராக கிடந்த அலிஸ்ஸாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்காமல், களைப்பாக இருப்பதாக கூறி தூங்க சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலை வேலைக்கு செல்ல எழுந்த பிரியான் கண்ட காட்சிகள் அச்சுறுத்தும்படியாக அமைந்தது.

அலிஸ்ஸா உயிரிழந்து கிடப்பதை கண்ட பிரியான் உடனடியாக அலிஸ்ஸாவின் மொபைலை எடுத்து அதில், தாம் நகரை விட்டுச் செல்வதாக ஒரு தகவலை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

பின்னர் அலிஸ்ஸாவின் உடலை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார், பின்னர் எதுவும் நடக்காதது போன்று பிரியான் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரியவந்ததும், பிரியானின் நண்பர்களை பொலிசார் விசாரித்துள்ளனர்.

அதில், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலிஸ்ஸாவின் கால்களை உடைத்து பைக்குள் திணித்து மறைவு செய்ய முயற்சி மேற்கொண்டதை பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் பிரியானை கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்