சில நாட்களில் உயிரிழக்க போகும் நபருக்கு நடந்த திருமணம்: அற்புத தருணம்

Report Print Raju Raju in அமெரிக்கா
446Shares
446Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் சிறுநீரக செயலிழப்பால் நபர் ஒருவர் சில நாட்களில் உயிரிழக்க போகும் நிலையில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Williamsport நகரை சேர்ந்தவர் டொனால்டு ஜெட். இவருக்கு சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்ட வெகு விரைவில் அவர் உயிர் இழந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

தனது இறுதி நாட்களை படுக்கையில் கழித்து வரும் ஜெட்டுக்கு கடைசி ஆசையாக தனது காதலியை மணக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

ஜெட்டின் காதல் கதை பெரியதாகும், பல ஆண்டுகளாக அவர் ஜூலி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலிக்கு வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளது.

ஆனால் சமீபத்தில் கணவரை பிரிந்த ஜூலி தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜெட்டின் உடல் நிலை குறித்து அறிந்து ஜூலி அவரை காண வந்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஜெட்டும், ஜூலியும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்ட போது உணர்ச்சிவசப்பட்டனர்.

இதையடுத்து தனது திருமண விருப்பத்தை ஜூலியிடம் ஜெட் கூற, தானும் இதற்காக காத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

பின்னர் படுக்கையிலேயே அங்குள்ள உறவினர்கள், செவிலியர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இது தங்களது வாழ்க்கையின் மிக முக்கிய தருணம் என புதுமண தம்பதிகள் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்