பிறந்த குழந்தையை கொல்ல நினைத்தது ஏன்? தாயின் வாக்குமூலம்

Report Print Raju Raju in அமெரிக்கா
248Shares
248Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பெற்ற குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு கொல்ல பார்த்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கரோலினாவை சேர்ந்தவர் ஷெல்பி டைலர் (26), இவரின் கணவர் பேட்ரிக், தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் இன்னொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் டைலர் சொல்லாமல் இருந்த நிலையிலேயே அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிறந்த குழந்தையை கொல்ல முடிவெடுத்த டைலர் அதை குப்பை கொட்டும் பையில் அடைத்து, குப்பை தொட்டியில் கொண்டு போட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பேட்ரிக்கும், இன்னொரு குழந்தையும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக குப்பை தொட்டி இருக்கும் சாலை வழியாக சென்ற இரண்டு சிறுவர்கள் குழந்தை அழுவதை பார்த்து அதை மீட்டுள்ளனர்.

பின்னர் இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்டு பொலிஸ் மூலம் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

இதனிடையில், இந்த சம்பவம் நடந்த அதே நாள் மாலை பொலிஸ் அதிகாரிகளிடம் சென்ற டைலர் தனது குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதை ஒப்பு கொண்டுள்ளார்.

குப்பை தொட்டி அருகில் இருந்த சிசிடிவி கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதையும் பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை குணமாகி தற்போது அதன் தாத்தா, பாட்டி அரவணைப்பில் உள்ளது.

குழந்தைக்கு டிரினிட்டி கிரேஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட டைலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

மேலும், தங்களிடம் பண வசதி இல்லை என்பதால் இரண்டாவது குழந்தையை வளர்க்க முடியாது என கருதி இப்படி செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், டையில் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே இச்செயலை செய்ததாகவும் அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆனால் இது வேண்டுமென்றே செய்யப்பட்ட விடயம் என கூறி நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது.

அவருக்கான தண்டனை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்