13 வயது மாணவருடன் உறவில் ஈடுபட்ட 44 வயது ஆசிரியை: கையும் களவுமாக பிடித்த தந்தை

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்காவில் 13 வயது மாணவருடன் 44 வயது ஆசிரியை தகாத முறையில் பழகியதை அவரது தந்தை கண்டுபிடித்துள்ளார்.

Rachel Gonzales(44) அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவர் அங்கிருக்கும் Cherry Elementary பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியையாக உள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பள்ளியில் படித்து வரும் 13 வயது மாணவனுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மாணவனின் தந்தை குறித்த ஆசிரியையும், தனது மகனும் காரின் உள்ளே மிகவும் நெருக்காம இருப்பதை கண்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் மாணவனின் தொலைப் பேசியை வாங்கி பார்த்த போது, இருவருக்கும் இடையே இருக்கும் உறவை புரிந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து பள்ளி மாணவனுடன் மிகவும் நெருக்காமாக இருந்ததாக கூறி ஆசிரியை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டா, அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22-ஆம் திகதி அவருக்கு சிறைத் தண்டனை விதித்தது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இது போன்று மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது தொடர்பாக ஆசிரியர்கள் சிக்குவது 36 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் கடந்த பத்து ஆண்டுகளாக இது தொடர்பாக 302 வழக்குகள் உள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால் இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இது போன்ற செயலில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கண்டால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தானாக முன் வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் அப்படி தவறினால் அவர் கடுமையான தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்