ஒருவருக்கொருவர் பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற உயிர் தோழிகள்: சுவாரசிய நிகழ்வு

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

இரண்டு பெண் மருத்துவர்கள் நெருங்கிய தோழிகளாக இருந்த நிலையில் ஒருவருக்கொருவர் பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரை சேர்ந்தவர் ஜோசிலின் ஸ்லாட்டர், இவரின் நெருங்கிய தோழி லக்குட்டா மார்டினிஸ்.

இவர்கள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள், கடந்த 2014-ல் மார்டினிஸுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில் 26 வாரங்களிலேயே இறந்துள்ளது.

அதே வருடத்தில் ஜோசிலினுக்கு குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு மார்டினிஸ் தான் பிரசவம் பார்த்தார்.

பின்னர் மார்டினிஸுக்கு இரண்டாம் முறையாக இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மூன்றாம் முறையாக மார்டினிஸ் கர்ப்படைந்த நிலையில் கடந்த மாதம் 6-ஆம் திகதி அவருக்கு சிசேரின் மூலம் அழகான குழந்தை பிறந்தது.

இந்த முறை தனக்கு 2014-ல் பிரசவம் பார்த்த மார்டினிஸுக்கு ஜோசிலின் பிரசவம் பார்த்துள்ளார்.

தோழி தனக்கு ஆற்றிய சேவைக்கு திரும்ப நன்றி கடன் செய்த திருப்தி ஜோசிலினுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மார்டினிஸ் கூறுகையில், என் தோழி அற்புதமானவள், தனக்கு நிறைய உதவியுள்ளதாக கூறியுள்ளார்.

ஜோசிலின் கூறுகையில், மார்டினிஸுக்கு பிரசவம் பார்த்தது எளிதாகவும் சிறப்பாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜோசிலின் இரண்டாம் முறையாக தற்போது கர்ப்பமாகியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்