மர்மமான முறையில் இறந்த ஷெரின்: வளர்ப்பு தாய் கைது

Report Print Fathima Fathima in அமெரிக்கா
412Shares
412Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் மர்மமான முறையில் மரணமடைந்த மூன்று வயது குழந்தை ஷெரினின் வளர்ப்பு தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தனர்.

இதில் ஷெரின் என்ற மூன்று வயது சிறுமி அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டவர்.

கடந்த மாதம் 7ம் திகதி சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் தண்டனையாக வெளியே நிறுத்தி வைத்ததாக மேத்யூஸ் கூறினார்.

அதன்பின்னர் குழந்தை காணாமல் போனதாகவும், குழந்தையை கண்டுபிடித்து தருமாறும் பொலிசிடம் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தியில் 20 நாட்களுக்கு பின்னர் சிறுமி ஷெரினின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மேத்யூசிடம் நடத்திய விசாரணையில் பால் குடிக்கும் போது குழந்தைக்கு அடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், குழந்தையின் உடலை மறைத்ததையும் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து மேத்யூஸை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இவரது மனைவியான சினி மேத்யூஸை தற்போது பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று ஷெரினை தனியாக விட்டுவிட்டு மற்றொரு மகளுடன் விருந்து நிகழ்ச்சி சென்றதாக சினி மேத்யூஸ் வாக்குமூலம் அளித்தார்.

எனவே குழந்தையின் இறப்புக்கு அவரும் காரணம் எனக்கூறி பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து டல்லாஸ் மருத்துவ ஆய்வாளர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்