கொள்ளையடித்த இடத்திலேயே விருந்து கொடுத்த திருடர்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்காவில் கொள்ளையடித்த உணவகத்தில் அங்கிருந்த வாடிக்கையாளர்களுக்கு திருடர்கள் விருந்தளித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள உணவகத்தில் முகமூடி போட்ட மூன்று திருடர்கள் திடீரென்று உள்ளே நுழைகின்றனர்.

உள்ளே நுழைந்த அவர்கள் லாக்கரில் உள்ள பணத்தை எடுக்கின்றனர்.மற்றோரு நபர் அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்கினார்.

அவர்களை உட்கார சொல்லி விட்டு உள்ளே சென்று டோனட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு வெளியே செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகியாதல், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அறிந்த பொலிசார் திருடர்களை விரைவில் கைது செய்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்