புயலுக்கு முன் அமைதி ஏன்? வடகொரியா விவகாரம் குறித்து பேசிய டிரம்ப்

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

வடகொரியா நடந்து கொள்ளும் விதத்தை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா விவகாரத்தில், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் கூட வடகொரியாவுடன் ஒரே ஒரு விடயம் மட்டும் தான் செயல்படும் என்று மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் திகதி அமெரிக்காவின் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விருந்தில் கலந்து கொண்ட டிரம்ப், புயலுக்கு முன் அமைதி என்று சூசகமாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவரிடம் இது குறித்து கேட்ட போது, வடகொரியா இவ்வாறு நடந்துகொள்வதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் வடகொரியாவுடனான பிரச்சினையை இதற்கு முன் அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களே முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்