16 ஆண்டுகள் கழித்து வெளியான அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
2643Shares
2643Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தபோது விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை 16 ஆண்டுகள் கழிது நாசா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களை விமானம் மூலம் மோதி தகர்த்தனர் அல் கொய்தா தீவிரவாதிகள். ஒசாமா பின்லேடன் தலைமையில் இயங்கிய அல்கொய்தா அமைப்பு நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் சுமார் 2,753 பேர் பலியானார்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர் பிராங்க் கிளபர்ஸ்டன் பார்த்துள்ளார்.

வானில் புகை எழுவதை பார்த்த அவர், கமெரா மூலம் வானில் இருந்தபடியே அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

16 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்