வீட்டுக்குள் புகுந்து 8 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்

Report Print Raju Raju in அமெரிக்கா
145Shares
145Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் வீட்டுக்குள் புகுந்து 8 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் சுட்டு கொன்றார்கள்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் பிளானோ நகரிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, அங்குள்ள West Spring Creek Parkway பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டுக்குள் ஞாயிறு இரவன்று மர்ம நபர் துப்பாக்கியுடன் சென்றுள்ளான்.

பின்னர், வீட்டுக்குள் இருந்த நபர்களை சுட, எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் குறித்த வீட்டுக்கு வந்த போது கொலைகாரனும் அங்கிருந்துள்ளான்.

இதையடுத்து அவனை பொலிசார் சுட்டுக் கொன்றனர். கொலைகாரனுக்கு வீட்டில் இருந்த நபர்கள் முன்னரே அறிமுகமானவர்களா என்ற விபரம் தெரியவில்லை.

உயிரிழந்த எட்டு பேரில் கொலைகாரனும் அடக்கமா என்ற விவரம் வெளிவராத நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த வீட்டின் அருகில் வசிக்கும் Crystal என்ற பெண் கூறுகையில், குறித்த வீட்டுக்குள் ஆண் மற்றும் பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர், 30-திலிருந்து 40 முறை துப்பாக்கி சுடும் சத்தம் தனக்கு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்