இர்மா புயலை துப்பாக்கியால் சுட்டுத்தள்ள ஏற்பாடு: பொலிசார் வெளியிட்ட எச்சரிக்கை

Report Print Peterson Peterson in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அமெரிக்காவை தாக்க வரும் இர்மா புயலை துப்பாக்கியால் சுட்டுத்தள்ள ஒரு குழு உருவாகியுள்ளதாகவும், இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அந்நாட்டு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை இன்னும் சில மணி நேரங்களில் இர்மா என்ற கடுமையான புயல் தாக்க உள்ளது.

advertisement

அமெரிக்க வரலாற்றில் இது மோசமான புயல் என்பதால் புளோரிடாவை விட்டு சுமார் 50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் 'Shoot at Hurricane Irma' என்ற பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ‘புளோரிடாவை தாக்க வரும் இர்மாவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு விரட்ட வேண்டும்’ என நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதனை ஆதரித்து இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக 25,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பதிவிற்கு 53,000 லைக் செய்துள்ளனர்.

இந்நிலையில், இர்மாவை சுட்டுத்தள்ள குழு ஒன்று உருவாகியுள்ளதை தொடர்ந்து பொலிசார் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில், ‘இர்மா புயலை துப்பாக்கியால் சுடுவதால் அதனை விரட்டி விட முடியாது.

ஆனால், சுமார் 200 கி.மீ வேகத்தில் வரும் புயலை நோக்கி துப்பாக்கியால் சுட்டால் குண்டுகள் திரும்பி வரும் ஆபத்து உள்ளது.

எனவே, இம்முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்’ என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்