மூளை பாதிக்கப்பட்ட நோயாளியை கற்பழித்த மருத்துவமனை ஊழியர் கைது

Report Print Peterson Peterson in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூளை பாதிக்கப்பட்ட பெண் நோயாளியை ஊழியர் ஒருவர் மருத்துவமனையிலேயே கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் Bronx-Lebanon என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் Keith Nembhard(37) என்ற நபர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்தமாதம் 32 வயதான பெண் ஒருவர் மூளை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை அடிக்கடி ஊழியர் சென்று பார்த்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனை நோயாளிகளை ஆய்வு செய்து வர செவிலியர் ஒருவர் அறைகளை சுற்றி வந்துள்ளார்.

அப்போது, மூளை பாதிக்கப்பட்ட பெண்ணின் அறைக்கு சென்றபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அறைக்குள் சுயநினைவில்லாமல் படுக்கையில் படுத்திருந்த நோயாளியை ஊழியர் கற்பழித்திக்கொண்டு இருப்பதை செவிலியர் நேரில் கண்டுள்ளார்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக உயர் மருத்துவர்களிடம் தெரிவித்த நிலையில் காவலர்களால் சுற்றி வளைத்து ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மூளை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் என்ன நிகழ்ந்தது என்பது தெரியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்