வடகொரியாவுக்கு பாடம் புகட்ட அமெரிக்கா அதிரடி திட்டம்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

தொடர் ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் கூட ஜப்பானை சீண்டிபார்க்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை வடகொரியா மேற்கொண்டது.

வடகொரியா மீது, ஐ.நா கடுமையான பொருளாதார தடை விதித்துள்ள போதிலும் அந்நாடு தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து வடகொரியாவின் அராஜகத்தை அடக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், வடகொரியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என டிரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஐ.நா மூலம், மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி ராணுவ ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

மேலும், அனைத்து வகைகளிலும் வடகொரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என சாரா கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்