இப்படியும் ஏமாற்ற முடியுமா? இளம்பெண் செய்த செயல்: 50 ஆயிரம் டொலர் நன்கொடை

Report Print Santhan in அமெரிக்கா
493Shares
493Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் புற்றுநோயாளியாக நடித்து நிதி திரட்டிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார் மாநிலம் வெஸ்ட்செஸ்டர் கெளண்டியை சேர்ந்தவர் வெடோட்டி ஹூப்ராஜ்(38).

இவர் ஷிவோனி டியோகரன் என்ற போலி பெயரில் தனக்கு கல்லீரலில் லூக்கேமியா என்னும் புற்றுநோய் இருப்பதாக கூறி கோ பண்ட்மி என்ற வலைத்தளத்தின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு நிதி உதவி கேட்டுள்ளார்.

தான் இன்னும் 18 மாதங்கள் தான் உயிருடன் வாழ்வேன். எனது சிகிச்சை செலவுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார்.

இதற்கு ஆதாரமாக பல மருத்துவர்கள் அளித்திருந்த மருத்துவ சிகிச்சை குறிப்புகளையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால் நன்கொடையாளர்களில் சிலருக்கு இவரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கும் 50 ஆயிரம் டொலர்களுக்கும் அதிகமான பணம் நன்கொடையாக கிடைத்துள்ளது. இவரது மருத்துவ குறிப்புகள் தொடர்பாக சிலர் ஆராய்ந்தபோது சந்தேகம் ஏற்பட்டதால், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் அவருக்கு புற்று நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் பணம் சம்பாதிக்க இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்ற உண்மை தெரியவந்ததால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்