போக்குவரத்து நெரிசலா? சாலைகளில் இனி பறந்தே செல்லலாம்: பிரித்தானியரின் புதிய கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா
118Shares
118Shares
lankasrimarket.com

இனி எந்த சாலையிலும் போக்குவரத்து நெரிசல் பற்றிக் கவலைப்பட வேண்டாம், காரணம் பிரித்தானிய கண்டுபிடிப்பாளர் ஒருவர் பறக்கும் ஜெட் உடை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

ஐந்து சிறு ஜெட் எஞ்சின்கள் உதவியால் இயங்கும் இந்த உடையை டீசல் உதவியாலும் கூட இயக்கலாம்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த உடையின் உதவியால், 3 முதல் 4 நிமிடங்கள் வரை மட்டுமே பறக்க இயலும்.

இன்னொரு உடை 9 நிமிடங்கள் வரை பறக்க உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக நேரம் பறக்கும் வகையில் உடையில் மாற்றங்களை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உடையின் உதவியால் மணிக்கு 52 கிலோமீற்றர்கள் வேகத்தில் பறக்க இயலும். இந்த உடையைக் கண்டுபிடித்துள்ள Richard Browning, லண்டன் நகர தெருக்களில் அதை அணிந்து கொண்டு பறந்து காட்டினார்.

இந்த உடை பார்ப்பதற்கு அயன் மேன் போல இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த உடையின் விலை 340,000 பவுண்டுகள் மட்டும்தான்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்