பிரித்தானிய விமானப்படையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்: கண்கவர் வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா
229Shares
229Shares
lankasrimarket.com

பிரித்தானிய விமானப்படையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 விமானப்படை விமானங்கள் லண்டனுக்கு மேலாக பறந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

Westminster Abbey ceremonyயைத் தொடர்ந்து பக்கிங்காம் மாளிகையின் பால்கனியில் நின்றவாறு ராஜ குடும்பத்தினர் அந்த அருமையான காட்சியைப் பார்வையிட்டனர்.

மகாராணி இளவரசர்களான வில்லியம், ஹரி மற்றும் அவர்களது மனைவிமாருடன் அந்த காட்சிகளைக் கண்டு ரசித்தார்.

1918ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி Royal Flying Corps மற்றும் the Royal Naval Air Service இரண்டும் இணைந்து RAF என்னும் விமானப்படை பிறந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.

அதைக் கொண்டாடும் வகையில் விமானங்கள் லண்டனுக்கு மேலாக பறந்து சென்றன. விமானங்களுடன் Puma, Chinook, Juno மற்றும் Jupiter ஆகிய ஹெலிகொப்டர்களும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்