தாயின் கவனக்குறைவால் குழந்தைக்கு நேர்ந்த கதி: எச்சரிக்கை விடுக்கும் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா
168Shares
168Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் குழந்தையை வைத்து சறுக்கி விளையாடிய தாயின் கவனக்குறைவால் குழந்தையில் கால் எலும்பு முறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிழக்கு லிங்கன்ஷையரை சேர்ந்தவர் ஷோனா கீத்லே. இவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அருகில் இருந்த குழந்தைகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சறுக்கி விளையாடும் ஆசையுடன் குழந்தையை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு ஷோனா சறுக்கினார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக குழந்தையின் கால் மடங்கி அதன் எலும்பு முறிந்தது.

இதையடுத்து வலியால் துடித்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தற்போது குழந்தை நலமாக இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்