பிரித்தானியா அரச குடும்பத்தில் எலிசபெத் மகாராணி மட்டுமே இந்த நாட்டுக்கு சென்றுள்ளார் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
305Shares
305Shares
lankasrimarket.com

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இதுவரை அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

கனடா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இதுவரை பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். மட்டுமின்றி கிரேக்கம் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு அவர் இதுவரை சென்றதே இல்லை என்பதும்,

ஆனால் அவரது பேரப்பிள்ளையான இளவரசர் வில்லியம் பிரித்தானிய வரலாற்ரில் முதன் முறையாக சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் சென்று வந்துள்ளார்.

இருப்பினும் உலகில் ஒரே ஒரு நாட்டுக்கு மட்டும் முதன் முறையாக பிரித்தானிய அரச குடும்பத்தில் மகாராணி எலிசபெத் மட்டுமே சென்று வந்துள்ளார்.

அது ரஷ்யா நாடு. கடந்த 1994 ஆம் ஆண்டு இளவரசரும் கணவருமான பிலிப்புடன் அரசு முறை பயணமாக எலிசபெத் மகாராணி ரஷ்யா சென்றுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் 3 நாட்கள் தங்கிய எலிசபெத் மகாராணியை அப்போதைய ரஷ்ய ஜனாதிபதியான போரிஸ் என். யெல்ட்சின் வரவேற்று சிறப்பு செய்திருந்தார்.

இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசு முறைப்பயணமாக பிரித்தானியா வருகை தந்திருந்தார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியார் இதுவரை பூட்டான் நட்டுக்கும் சென்றதில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு இந்தியா செல்லும் வழியில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதி பூட்டான் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதிகள் பூட்டான் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்