லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீ விபத்து: 72 பேர் உயிரிழந்த முதலாம் நினைவு நாளன்று அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares

கிரென்ஃபெல் தீ விபத்தின் முதலாம் நினைவு நாளன்று லண்டனில் உள்ள 20 மாடிக் குடியிருப்பில் திடீரென்று தீப்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் அமைந்திருக்கும் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்ததோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கிரென்ஃபெல் தீ விபத்தின் முதலாம் நினைவு நாளான இன்று மீண்டும் லண்டனிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை தீப்பிடித்தது.

Lewishamஇலுள்ள 20 தளங்கள் கொண்ட அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் 13ஆவது தளத்தில் தீப்பிடித்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அதிகாலை சுமார் 4.15 மணியளவில் வந்து சேருவதற்குமுன் 150 பேர் தாங்களாகவே கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.

தீயை அணைக்கும் தானியங்கி தண்ணீர் தெளிக்கும் அமைப்புகள் இயங்கினாலும் தீ எச்சரிப்பு அலாரம் இயங்காததால் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்த மக்களே வீடு வீடாகச் சென்று தட்டி எழுப்பி மக்கள் வெளியேற உதவினர்.

ஒரு தளம் மட்டுமே தீயால் பாதிக்கப்பட்டதோடு யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காலை 5.23க்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரனை நடந்து வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்