கள்ளத்தோணியில் வந்து குடியேறியவர்கள்: பெண் மீது இனவாத தாக்குதல் நடத்திய பிரித்தானியர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள சீன உணவகத்தில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் இளம்பெண் மீது இனவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு யார்க்ஷயர் பகுதியில் சீனத்து உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நடந்த விவகாரத்தை வீடியோவாக குறித்த உணவகம் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

அதில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் உணவகம் மீது பிழை கூறுகிறார். மட்டுமின்றி இது தொடர்பாக தமது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக பதிவிட உள்ளதாகவும் மிரட்டுகிறார்.

பின்னர் தமது கையில் இருந்த உணவை தூக்கி வீசுகிறார். மட்டுமின்றி உணவக ஊழியர் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டுகிறார்.

இதனையடுத்து குறித்த உணவக ஊழியர் பொலிசாரை அழைப்பேன் என கூறியதும், பொலிசாரை அழைத்து என்ன செய்ய போகிறாய்? நான் இங்கு பிறந்து வளர்ந்தவள். நீயோ கள்ளத்தோணி ஏறி இங்கு வந்து பிழைப்பவள் என அவதூறாக பேசியுள்ளார்.

குறித்த வீடியோவானது பல ஆயிரம் பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்