சர்ச்சைக்கு உள்ளான இளவரசர் ஜார்ஜின் விளையாட்டு

Report Print Trinity in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

நேற்று தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக போலோ விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டது. அதில் சற்றும் எதிர்பாராத விதமாக Duchess of Cambridge திருமதி கேட் மிடில்டன் தானும் விளையாட்டுகளில் பங்கேற்று குழந்தைகளை குஷிப்படுத்தினார்.

இந்த நிகழ்வு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இறந்த இளவரசி டயானாவுடன் இந்நிகழ்வு ஒப்பிட்டு பார்க்கப்பட்டு மக்களும் ஊடகமும் பெருமைப்பட்டது.

இருப்பினும் நேற்று விளையாட்டில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் சில மக்களின் வாய்க்கு அவலாகவும் மாறிப்போனது.

இளவரசர் ஜார்ஜ் தனது குட்டி நண்பனுடன் விளையாட்டு துப்பாக்கி ஒன்றை கையில் பிடித்து கொண்டு அவற்றை சுடுவது போல பாவித்து விளையாடிக் கொண்டிருந்தது அனைவரிடையேயும் சர்ச்சையை கிளப்பிவிட்டது.

அந்த துப்பாக்கி கொண்டு அவர் அங்கிருந்த தீயணைப்பு எச்சரிக்கை மணியை சுட பார்ப்பதும் பின் அவரது அம்மாவையே சுட பார்ப்பதும் அந்த நிகழ்வில் நிகழ்ந்தன.

சிறு குழந்தையான இளவரசரின் இந்த விளையாட்டை தீவிரமாக எடுத்து கொண்ட சிலர், இது தவறு. லண்டன் முழுவதும் வன்முறை பற்றியெரிகிற இந்த நேரத்தில் இளவரசர் ஜார்ஜ் இதுபோன்ற துப்பாக்கியோடு விளையாடுவது மனதிற்கு வேதனை அளிக்கிறது என்றும் அரச குடும்பத்து குழந்தையின் கையில் துப்பாக்கி எதற்கு என்றும் நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொம்மை துப்பாக்கியுடன் விளையாடுவதாகத்தான் நினைக்கிறார்கள்.

ஆனால் சில சமயங்களில் அது தவறான நினைப்பாகவே போய் விடுகிறது என்றும் அவராவது கருத்தை கூறியிருந்தனர்.

நான்கு வயதான இளவரசர் ஜார்ஜ் இது எதனையும் அறியாமல் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டதை மக்கள் இதனை தீவிரமாக கொண்டு செல்வார்கள் என்று யாரும் நினைக்கவில்லை.

இருப்பினும் இதனை பெரிது படுத்தாது, தனது அன்னை பாசத்தை அழகாக காட்டிக் கொண்டிருந்தார் அவரது மாமியார் போலவே.

விளையாட்டின் இடையில் குட்டி இளவரசி சார்ட்லோட் தனது அம்மாவிற்கும் அண்ணனிற்கும் ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் நிகழ்த்தி காட்டியது அனைவரின் மனதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்