லண்டனில் 2 மணி நேரத்தில் 3 வாள்வெட்டு சம்பவம்: இளைஞர்கள் மூவர் கவலைக்கிடம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இரண்டு மணி நேரத்தில் 3 பேர் வாள்வெட்டு சம்பவத்திற்கு இரையான துயரம் பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.

பிரிக்ஸ்டன் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.20 மணியளவில் பொலிசாருக்கு வாள்வெட்டு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

பிரிக்ஸ்டன் பகுதியில் இருந்து 3 மைல்கள் வடப்பகுதியில் அமைந்துள்ள Northolt நகரில் சுமார் 7 மணி அளவில் அடுத்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்திருந்த 20 வயது இளைஞரை மீட்டு பொலிசார் மருத்துவமனை சேர்ப்பித்துள்ளனர்.

இதேபோன்று 8.11 மணி அளவில் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இரையாகியுள்ளார்.

மட்டுமின்றி சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் 35 வயது நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு பலியானதுடன் இந்த ஆண்டில் இதுவரை லண்டனில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 என உயர்ந்துள்ளது.

சுமார் 111 நிமிடங்களில் நடந்த 3 வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்